கொரோனா வைரஸ் விவகாரத்தை திறமையாக கையாளவும், தொடர்ந்து கண்காணிக்கவும்

கொரோனா வைரஸ் விவகாரத்தை திறமையாக கையாளவும், தொடர்ந்து கண்காணிக்கவும் குழு ஒன்றை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதில் உள்துறை இணையமைச்சர், சுகாதாரத்துறை அமைச்சர், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர், சிவில் விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பர். இதற்கான முதல் கூட்டம் தற்போது நடைபெற்று வருகின்றது.