இத்திட்டத்துக்காக ரஷ்யாவில் 3000 கி.மீ. தொலைவுக்கும் சீனாவில் 5,111 கி.மீ. தொலைவுக்கு குழாய் அமைக்கப்பட்டுள்ளது.
செர்பியாவின் சக்தி" (Power of Siberia) என்ற பெயரில் உருவாக்கப்பட்ட இத்திட்டத்தின் கீழ் ரஷ்யாவில் 3000 கி.மீ. தொலைவுக்கும் சீனாவில் 5,111 கி.மீ. தொலைவுக்கு குழாய் அமைக்கப்பட்டுள்ளது என சீனாவின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான சின்குவா தெரிவித்துள்ளது.
உலகிலேயே அதிக அளவு எரிபொருளை பயன்படுத்தும் நாடு சீனா. அந்நாட்டின் இயற்கை எரிவாயு தேவையும் நாளுக்கு நாள் அதிகரித்தபடி உள்ளது. குறிப்பாக அந்நாட்டின் வடக்குப் பகுதிகளில் நிலக்கரி பயன்பாட்டைக் குறைத்து பசுமை எரிபொருளுக்கு மாறும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.