சிரியாவில் 8 குழந்தைகளைக் கொன்ற பயங்கரவாதிகள்

போர் நிறுத்த ஒப்பந்தத்தை, பயங்கரவாதிகள் கடந்த 24 மணிநேரத்திற்குள் 40 முறை மீறியுள்ளனர்.சிரியாவில் குர்து படைகளுடன் இணைந்து ஐ.எஸ். பயங்கரவாதிகளை எதிர்த்துப் போராடிய அமெரிக்க படைகள் வெளியேறியதால், ரஷ்யா மற்றும் துருக்கியின் தலையீடு அங்கு அதிகரித்துள்ளது. குர்து படையின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளை துருக்கி மற்றும் ரஷ்ய படைகள் கைப்பற்றியுள்ளன.

இதனால் ஐ.எஸ். பயங்கரவாதிகள் மீண்டும் அங்கு தலையெடுக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது. இச்சூழலில் அலெப்போ மாகாணத்தில் டால் ரிபாட் நகரின் கல்ஜிப்ரின் கிராமத்தில் புதன்கிழமை பயங்கரவாதிகள் மோர்ட்டார் குண்டுகளை எறிந்து தாக்கியுள்ளனர்.