பூமியின் வரலாற்றில் இரண்டாவது அல்லது மூன்றாவது அதிக வெப்பமான ஆண்டாக இந்த ஆண்டு அமையக்கூடும்.
கடந்த ஐந்தாண்டுகளிலும் (2015-2019) பத்தாண்டுகளிலும் (2010-2019) சராசரி வெப்பநிலை கண்டிப்பாக இதுவரை இல்லாத உச்சத்தை எட்டப்போகிறது.
கடல் நீரில் அமிலங்களின் அளவு 150 ஆண்டுகளுக்கு முன் இருந்ததைவிட 26 சதவீதம் அதிகமாகிவிட்டது. இதனால் பனிப்பாறைகள் உருகி கடலின் நீர்மட்டம் இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. ஆர்டிக் மற்றும் அண்டார்டிகா பனிப்பாறைகள் இந்த ஆண்டில்தான் வரலாறு காணாத அளவுக்கு உருகியுள்ளன.
2019ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களில் சுமார் ஒரு கோடி பேர் தாங்கள் வசித்த இடத்தை விட்டு இடம்பெயர்ந்திருக்கிறார்கள். இத்தகைய பேரிடர்களால் இடம்பெயர்வோர் எண்ணிக்கை இந்த ஆண்டுக்குள் 2.20 கோடியாக உயர வாய்ப்புள்ளது. மழை, வெள்ளம், வறட்சி போன்ற இயற்கை பேரிடர்களால் 70 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.